முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியுமான அட்மிரல் தயா சந்தகிரி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
இலங்கை கடற்படையின் 14 வது கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற அட்மிரல் டி.டப்.கே.தயா சந்தகிரி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
கடல்சார் மற்றும் கடற்படைத் துறையில் அவருக்கு இருக்கும் பரந்த அறிவு மற்றும் அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் கடல்சார் மற்றும் கடற்படைக் கொள்கைகள் குறித்த ஆலோசகராக இன்றைய தினம் நியமித்தார்.
தயா சந்தகிரி 2001 ஆம் ஆண்டு,ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் இலங்கை கடற்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1