24.4 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையில் வாழ முடியாமல் மேலுமொரு குடும்பம் தமிழகம் சென்றது!

தொடரும் பொருளாதார நெருக்கடியால் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 இலங்கை தமிழர்கள் இன்று அதிகாலை தனுஸ்கோடி முதலாம் மணல் திட்டிற்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும்சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த 2022 ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்று  ள்ளனர்.

இந்நிலையில் இலங்கை வவுனியா மாவட்டம் நெடுங்குழி பகுதியை நந்தகுமார் அவரது  மனைவி நித்யா மற்றம் அவரது 3 குழந்தைகள் என ஒரே குடும்பத்தை சேர்ரந்த மொத்தமாக 5 பேர் நேற்று மாலை மன்னாரில் இருந்து ரூ.1.50 இலட்சம் கொடுத்து பைப்பர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் கடற்கரையில் வந்திறங்கினர்.

தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் போலீசார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதில் இருந்து அத்தியாவசிய பொருட்களின் விலை சற்று குறைந்த வந்த நிலையில் தற்போது மீண்டும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் குழந்தைகளுடன் இலங்கையில் வாழ வழி இன்றி தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 5 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 293 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊடகவியலாளர் மீது குற்றச்சாட்டு

east tamil

குடத்தனையில் பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை இணைந்து அதிரடி சோதனை

east tamil

முல்லைத்தீவில் தூக்கிலிடப்பட்ட நாய்: செல்லமாக வளர்த்த பெண் சொல்லும் கதை; கொடூர பெண்ணுக்கு விளக்கமறியல்!

Pagetamil

யாழ் பல்கலையில் இரவில் பெண்களின் உள்ளாடைகள் காணப்படும் சம்பவம் உண்மையா?: மற்றொரு விளக்கம்!

Pagetamil

மாணவர்கள் மீது இரும்புக்கர நடவடிக்கை தேவை: விடாப்பிடியாக நிற்கும் யாழ் பல்கலை ஆசிரியர்கள்!

Pagetamil

Leave a Comment