ரிக்ரொக்கில் பதிவிடுவதற்காக கையடக்கத் தொலைபேசியில் வீடியோக்களை பதிவு செய்தபடி மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணித்த இரு இளைஞர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
ஹொரணை கோறளைம பிரதேசத்தில் இவர்கள் காருடன் மோதியுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் வெத்தரை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மூன்று மோட்டார் சைக்கிள்களுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு இளைஞர் தனது மோட்டார் சைக்கிளுடன் தப்பிச் சென்றுள்ளார்.
தலங்கம பிரதேசத்தில் வசிக்கும் ஐந்து இளைஞர்கள் நான்கு மோட்டார் சைக்கிள்களில் கொழும்பில் இருந்து ஹொரணை நோக்கி பயணித்துள்ளனர். விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், தமக்கு முன்னால் சென்ற மூன்று மோட்டார் சைக்கிள்கள் அதிவேகமாக செல்வதை வீடியோ எடுத்து, முன்னால் சென்ற வாகனத்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகினர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.