நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தக்கு எதிராக நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் போராட்டம் நடைபெற்றது. இதில் பல சமூக அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொல்துவ சுற்றுவட்டத்திலிருந்து பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முடியாதவாறு பிரதான வீதியை மறித்து போராட்டம் நடத்தவுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்திருந்தனர். வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எந்தவொரு வீதியையும் மறிக்கவோ அல்லது வன்முறையை ஏற்படுத்தவோ கூடாது எனவும், மக்கள் பிரதிநிதிகளின் பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் வகையிலும் அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் செயற்படாத விதமாக போராட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதை மீறினால் பொலிசார் நடவடிக்கை எடுப்பார்கள் என போராட்டம் தொடங்குவதற்கு முன்பே போராட்டக்காரர்களுக்கு காவல்துறை தகவல் கொடுத்தது.
பிரதிவாதிகள் பொறுப்பேற்க முடியாவிட்டால் போராட்டத்தை உடனடியாக கலைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெருமளவான பொலிஸார் வரவழைக்கப்பட்ட நிலையிலும் பெருமளவான மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.




