தான் நகை திருடியதாக பொலிஸ் புத்தகத்தில் முறைப்பாடு காட்டப்பட்டால் நாளையே பாராளுமன்ற உறுப்புரிமையை துறந்து, விடைபெறுவேன் என பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஒவ்வொருவருக்கும் சிறுவயதில் பட்டப்பெயர் வைத்து அழைக்கப்படுவதாக ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். சங்கிலி திருடியதாக தன்னை ரத்தரன் என்று அழைக்கப்படவில்லையென்றும், அன்பினாலேயே குடும்பத்தினர் அவ்வாறு அழைப்பதாக ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
தான் நகை திருடியதை பார்த்தவர்கள் அதை தெரிவிக்குமாறு சவால் விடுவதாக அபேகுணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இணையவழி சட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரோஹித அபேகுணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.




