இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவராக சி.சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று (21) நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தின் இரகசிய வாக்கெடுக்கில் சிறிதரன் வெற்றியீட்டினார்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் சீ.யோகேஸ்வரன் போட்டியிலிருந்து விலகினார்.
எம்.ஏ.சுமந்திரன்- சி.சிறிதரனுக்கிடையில் தலைமைக்கான போட்டி நடந்தது. எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகளும், சி.சிறிதரன் 184 வாக்குகளும் பெற்றனர்.




