முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கியதால், 10 வயது சிறுவன் ஒருவர் நேற்று (20) மாலை உயிரிழந்துள்ளதாக கொக்கிளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அலரி மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சல் கயிற்றை கழுத்தில் சுற்றியபடி, மரத்தில் சிறுவன் ஏறிய போது, கிளையொன்று முறிந்து சிறுவன் நிலத்தில் விழுந்துள்ளார். இதன்போது ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் உயிரிழந்தார்.
பிரசாந்த் தனோஷ் என்பவரே உயிரிழந்தார்.
சிறுவன் உடனடியாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




