மன்னார் விபத்தில் குடும்பஸ்தர் பலி

Date:

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,பள்ளமடு பகுதியில் நேற்று முன்தினம் (19) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் மக்கள் மீது கடுமையாக தாக்கி விபத்தை ஏற்படுத்திய பேருந்தையும்,அதன் சாரதியையும் காப்பாற்றிச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,பள்ளமடு வைத்தியசாலையில் இல் இருந்து சற்று தொலைவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

சிறிய ரக பேருந்து –மன்னார் யாழ் பிரதான வீதியூடாக பயணித்த போது துவிச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் மீது குறித்த பேருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

-இதன் போது கோயில் குளம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது,அதே கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற பகுதி அடம்பன் பொலிஸ் பிரிவுக் குற்பட்டதாக காணப்பட்ட போதும்,இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து உண்மை நிலையை அறிந்து கொள்ளாது உயிரிழந்த மற்றும்,படு காயமடைந்தவர்களின் உறவினர்கள் அவ்விடத்தில் கூடிய போது அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதோடு,விபத்தை ஏற்படுத்திய தனியார் போரூந்தையும்,அதன் சாரதியையும் மீட்டு இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்தில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலத்தை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்ப இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

மேலும் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் இருந்து அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் உயிரிழந்தவரின் உறவுகள் அவ்விடத்தில் கத்திக் கொண்டிருந்த போது தாக்கியதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததோடு, விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இலுப்பைக்கடவை பொலிஸாரின் நடவடிக்கை குறித்து விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...

நீர்கொழும்பு சிறைக்குள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: சிறைச்சாலை ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்