யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலும் 2 டெங்கு மரணங்கள்!

Date:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

நேற்று (18) இரவு இரண்டு மரணங்களும் நிகழ்ந்தன.

அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா சிந்துஜன் (31) எனும் இளைஞன், கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த நிலையில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர் சில நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அவர் டெங்கு தொற்று தீவிரமடைந்து, மூளை அழற்சி ஏற்பட்டிருந்தது. நேற்றிரவு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிளிநொச்சி, முழங்காவிலை சேர்ந்த பெண்ணொருவர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இரண்டு மரணங்களும் டெங்கு தொற்றினால் ஏற்படும் அரிதான தாக்கங்களால் உயிரிழந்துள்ளனர். டெங்கு தொற்றினால் ஏற்படும் அரிதான மரணங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்