ஹிகுரக்கொட மின்னேரிய பிரதேசத்தில் வீடொன்று இடிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹிகுரகொட பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் 23 வயதான ஒரு பிள்ளையின் தாய் உயிரிழந்துள்ளதுடன், அவரது கணவர் மற்றும் ஒன்றரை வயது குழந்தையும் விபத்தில் காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1