மட்டக்களப்பில் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம்

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேவேளை வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லரிப்பு பிரதேசத்தில் வெள்ள நீர் வீடுகளுக்குள் உட் புகுந்ததினால் பாதிக்கப்பட்டவர்கள் இடைத் தங்கல் முகாம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் நலன் விரும்பிகளினால் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

சிலர் உயரமான இடங்களில் தங்களது கால் நடைகளை பாதுகாப்பதற்காக தற்காலிக கொட்டில் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளமையால் படகுகள் மூலம் போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று காலை 10 மணி முதல் மீண்டும் மாவட்டத்தில் அடை மழை பெய்து வருகின்றது. வயல் நிலங்கள்,சிறுதோட்டப் பயிர்கள் என்பன பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கால் நடைகளுக்கும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் கவலை தெரிவிக்கினறனர். மருத்துவ சேவையும்,குடிநீரும் தேவையாகவுள்ளதாக தெரிவிக்கினறனர்.

spot_imgspot_img

More like this
Related

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...

LAUGFS எரிவாயு விலையும் குறைந்தது!

LAUGFS எரிவாயு நிறுவனம், இன்று நள்ளிரவு முதல் வீட்டு உபயோக எரிவாயு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்