வவுனியாவில் கைதான காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்க தலைவியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

Date:

வவுனியாவில் கைது செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவியைஉடனடியாக விடுதலை செய்ய வேண்டும் யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவி இளங்கோதை தெரிவித்தார்

வவுனியாவில் கைது செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவிதொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

நீண்ட காலமாகஎமது காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை விடுவியுங்கள். காண்பியுங்கள் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். அரசாங்கத்திடம் வேறு எதையும் கேட்கவில்லை பணமோ நஷ்ட ஈடு நாங்கள் கேட்கவில்லை

நேற்றைய தினம் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவி ஜெனிற்றாவை பலவந்தமாக இழுத்து சென்று பொலிசார் அராஜகமாக கைது செய்துள்ளனர்

இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் அவரை உடனடியாக விடுதலை செய்வதற்கு அரசாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஏற்கனவே ஒரு பௌத்த மத குரு தமிழர்கள் அனைவரையும் வெட்டிக் கொல்லுவேன் என வெளிப்படையாக தெரிவித்தார். ஆனால் அவரை இன்று வரை கைது செய்யவில்லை.

அவ்வாறானவர்களை விடுத்து ஜனநாயக ரீதியில் எமது பிள்ளைகளை கேட்டு போராடுகின்ற எங்களை கைது செய்கின்றமையானது அரசாங்கம் கொடூரமான ஆட்சியை செய்கின்றது என்பதையே எடுத்துக்காட்டுகின்றது

எனவே நேற்று வவுனியாவில் கைது செய்யப்பட்ட எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவி ஜெனிற்றாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்