யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் பணியாற்றும் ஒப்பந்த அடிப்படையிலான சிற்றூழியர்கள் இன்று (5) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமக்கு இதுவரை நாளாந்தம் ரூ.1200 கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும், தற்போது ஒப்பந்த பொறுப்பேற்றுள்ள தனியார் நிறுவனம் ரூ.1000 வழங்குவதாகவும், முன்னர் வழங்கப்பட்ட கொடுப்பனவே வழங்கப்பட வேண்டுமென கூறி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
எனினும், அங்கு சென்ற சம்பந்தப்பட்டவர்கள், ரூ.1000 சம்பளத்தில் வேலை செய்ய முடியாவிட்டால் வேலையை விட்டு செல்லுமாறும், தாம் வேறு ஆட்களை இணைத்து பணியாற்றுவதாக எச்சரித்தனர்.
இதையடுத்து, எதிர்ப்பை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1