யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிவில் சமூகப் பிரதிநிதிகள் என அழைக்கப்பட்டவர்களை நேற்று மாலை சந்தித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம் பெற்றது.
நேற்றைய சந்திப்புக்கான ஏற்பாட்டை ஈ.பி.டி.பியினரே பெருமளவில் மேற்கொண்டனர். இதனால், ஈ.பி.டி.பி தரப்பினரும் பெருமளவில் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1