வத்தளையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலையின் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரின் அறையில் இருந்தே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரி56 ரக துப்பாக்கி, 4 மெகசின்கள் மற்றும் 9 MM ரக 18 தோட்டாக்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆயுதங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவன் கனேமுல்ல சஞ்சீவவிற்கு சொந்தமானது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஆயுதங்களுடன் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர், தற்போது வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் வழிநடத்தலில், போதைப்பொருள் விற்பனை செய்த பணத்தை உண்டியல் முறையில் வெளிநாட்டுக்கு அனுப்பி வந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1