கதிர்காமம் ஆலய பிரதான பூசகர் கைது!

Date:

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமம் ஆலயத்துக்கு காணிக்கையாக செலுத்தப்பட்ட 38 பவுண் தங்கத்தட்டு காணாமல் போனமை, பின்னர் அதேபோல வேறொரு தங்கத்தட்டு வைக்கப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த ஆலயத்தின் பிரதான பூசகர் சோமிபால டி ரத்நாயக்க கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

களஞ்சிய காப்பாளராக பணியாற்றிய சுட்டி கபுவா எனப்படும் சமன் பிரியந்த கடந்த 19ஆம் திகதி சட்டத்தரணி ஊடாக திஸ்ஸமஹாராம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தங்கத்தட்டு தவறாக இடம்பிடித்தமை தொடர்பாக சந்தேகிக்கப்படும் தலைமை பூசகரின் வாக்குமூலம் கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் பதிவு செய்யப்பட்டதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...

களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்