யாழ் மாவட்டத்திலுள்ள செய்தியாளர்கள் பலரை விருந்துக்கு அழைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பண அன்பளிப்பும் வழங்கியுள்ளார்.
நேற்று (26) இந்த சம்பவம் நடந்தது.
யாழ் நகரிலுள்ள சொகுசு விடுதியொன்றில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 22 வரையான செய்தியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். விருந்தின் பின்னர், அனைவருக்கும் தனித்தனியாக காகித உறையில் ஒரு தொகை பண அன்பளிப்பும் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு செய்தியாளர்களுக்கும் தலா ரூ.10,000 வீதம் வழங்கப்பட்டதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1