யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளவர் கல்லாஞ்சிய, கெடவ பகுதியைச் சேர்ந்த டி.ஏ. சந்துன் தினேஷ் ஜெயக்கொடி 38 என்ற வயதுடையவர்.
கம்பஹா பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அவர்கள் பயணித்த வாகனம் இன்று (24) அனுராதபுரம் – ரம்பேவ வெலிஓயா சந்திக்கு அருகில் வீதியை விட்டு விலகி பேருந்திற்காக காத்திருந்த ஒருவரை மோதித்தள்ளியது.
கொழும்பு நோக்கி பயணிப்பதற்காக பேருந்துக்காக, பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தின் போது வகனத்தில் பத்து பேர் பயணித்துள்ளதாகவும், விபத்தில் காயமடைந்த 10 பேர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.