மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மரணத்தின் பின்னர் பி.சி.ஆர். பரிசோதனையின் போது அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
கம்பளை, எக்கால பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கோவிட் நோய்த் தொற்று முடிவுக்கு வந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த மரணம் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Omicron JA1 வைரஸ் தற்போது நாட்டில் பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர உறுதிப்படுத்துகிறார்.




