இலங்கையும் இந்தியாவும் மின்சார கட்டமைப்பை இணைக்கும் திட்டத்திற்காக, கடலுக்கடியில் பரிமாற்றக் கம்பிகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை மின்சாரசபை மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஒஃப் இந்தியா லிமிடெட் ஆகிய இரண்டு நாடுகளின் தொடர்புடைய அமைச்சுக்களின் செயலாளர்கள் தலைமையிலான கூட்டு பணிக்குழுவுக்கு அனுப்பப்படும் தொழில்நுட்ப அறிக்கையை இறுதி செய்துள்ளதாகம் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை மின்சாரசபை இந்த வார தொடக்கத்தில் இந்திய அதிகாரிகளுடன் ஒரு மெய்நிகர் கலந்துரையாடலை நடத்தியதாகவும், இரண்டு கட்டங்களையும் இணைக்க கடலுக்கடியில் கேபிள் ஒப்பந்தத்துடன் தொழில்நுட்ப அறிக்கையை முடித்ததாகவும் தகவல் லெளியாகியுள்ளது.
கடலுக்கு மேலாக மின்சார கம்பி இணைப்பை மேற்கொள்வது, எதிர்காலத்தில் பராமரிப்புக்கான கூடுதல் செலவுகளை ஏற்படுத்தும், நடுக்கடலில் மின்கம்பங்கள் அமைப்பதில் சிக்கல்கள் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.