ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு நாட்டு மக்கள் தம்மைக் கேட்டால் அந்தக் கோரிக்கையை நிராகரிக்கப் போவதில்லை என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க கூறுகிறார்.
கண்டியில் உள்ள பௌத்த பீடாதிபதிகளை இன்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் முதலில் மல்வத்து மகாநாயக்கரை சந்தித்து ஆசி பெற்றார். இன்று எங்கும் மோசடியும், ஊழலும் ஆட்சி செய்வதாக பீடாதிபதி தெரிவித்துள்ளார்.
பின்னர் அஸ்கிரிய மகாநாயக்கரிடம் ஆசி பெற்ற ரொஷான் ரணசிங்க ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்து வெளியிட்டார்.
தற்போது இந்த நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் மோசடியும், ஊழலும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நடக்கின்றன என்றார்.
மோசடி மற்றும் ஊழல்களை சுட்டிக்காட்டும் அனைவரின் கழுத்தும் துண்டிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அவர் மக்களுக்கான தனது போராட்டத்தை தொடருவார், அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது கிரிக்கெட் ஊழல்வாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுவேன் என்றும் நாட்டில் மோசடி மற்றும் ஊழலை இல்லாதொழிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.