24 வயது மலையாள நடிகை லக்‌ஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் மரணம்!

Date:

‘சவுதி வெள்ளக்கா’, ‘உயரே’ உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை லக்‌ஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 24.

மலையாளத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான ‘காக்கா’ (Kaakka) படத்தில் தன்னுடைய நடிப்பின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை லக்‌ஷ்மிகா சஜீவன் (Lakshmika Sajeevan). பஞ்சமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இது தவிர அவர், ‘புழையம்மா’, ‘சவுதி வெள்ளக்கா’, ‘உயரே’, ‘ஒரு யமந்தன் பிரேமகதா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ‘கூன்’ (Koon) படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், துபாயின் ஷார்ஜாவில் உள்ள வங்கி ஒன்றில் வேலைப் பார்த்துகொண்டிருந்த லக்‌ஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது இந்த திடீர் மரணம் மலையாள திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடைசியாக நவ.2-ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இருளையும் தாண்டிய ஒளி நம்பிக்கை கொடுக்கும்” என பதிவிட்டிருந்து குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் இரசாயன ஆயுதங்களை தயாரிக்கிறது: அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்த இஸ்ரேல்

ஈரான் தனது எதிரிகளுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராகி வருவதாகக்...

திருமலை துப்பாக்கிச்சூட்டின் பின்னணி!

திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் கடந்த முன்தினம் (2-ஆம் திகதி) இரவு நடத்தப்பட்ட...

உடல்நிலை காரணமாக மஹிந்தவின் மாமி ஊழல் வழக்கிலிருந்து விடுவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக, மூன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்