விஜயகாந்துக்கு ஒட்சிசன் உதவியுடன் தீவிர சிகிச்சை

Date:

மியாட் மருத்துவமனையில் விஜயகாந்துக்கு ஒட்சிசன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் கடந்த மாதம் 18ஆம் திகதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) இருக்கும் அவருக்கு சில நேரங்களில் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால்அந்த நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே, விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அவரை நுரையீரல் நிபுணர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், அவருக்கு முழுவதுமாக ஒட்சிசன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவின் உளறு வாய்க்கு பெரும் ஆப்பு: நிகழ்நிலை காப்பு சட்டத்தில் வழக்கு!

தெல்லிப்பளை வைத்தியசாலை புற்றுநோய் பிரிவு வைத்தியர் ஒருவருக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில்...

ஈரானின் எஃகு ஆலைகள் இரண்டு செயலிழந்தன

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களின் தொடர்ச்சியான அலைகளால் ஈரானின் இரண்டு மிகப்பெரிய...

சட்டத்தரணியின் அடிப்படை உரிமைகளை மீறியதால் ரூ.60,000 இழப்பீடு வழங்க பொலிஸ் பேச்சாளருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2017 ஆம் ஆண்டு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்