26 C
Jaffna
January 20, 2025
Pagetamil
கிழக்கு

முகநூலில் பெண்ணின் நிர்வாணப் படத்தை பதிவிட்டவருக்கு சிறைத்தண்டனை!

ஒரு பெண்ணின் புகைப்படத்தை நிர்வாணப் புகைப்படத்துடன் இணைத்து, போலியான முகநூலை திறந்து பதிவிட்ட நபர் ஒருவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா தீர்ப்பளித்தார்.

நேற்று (07) அக்கரைப்பற்று நீதிமன்றில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு எதிராக இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

குறித்த நபர் வெளிநாடொன்றில் இருந்தபோது பெண்ணொருவரின் புகைப்படத்தை நிர்வாணப்படுத்தி முகநூலில் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாட்டினை கையளித்திருந்தார்.

இந்த நிலையில் சம்மந்தப்பட்ட நபர் வெளிநாட்டில் இருந்து வருகைதந்தபோது விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அந்நபர் குற்றவாளியாக ஆதாரபூர்வமாக மன்று உறுதிப்படுத்திய நிலையில் நீதவான் இவ்வாறு தீர்ப்பளித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சம்பூரில் ஜப்பான் தூதுவர் குழுவின் விஜயம்: குளம் புனரமைப்பு திட்டம்

east tamil

அம்பாறையில் கரை ஒதுங்கிய உயிரிழந்த கடலாமைகள்

east tamil

அன்புச்செல்வ ஊற்று அறக்கட்டளையில் நினைவு தினமும் நல உதவியும்

east tamil

திருவள்ளுவர் சிலைக்கும் தடை: கல்முனையில் நிலைமை!

Pagetamil

சேருநுவர-கந்தளாய் வீதியில் பஸ் விபத்து – 14 பேர் காயம்

east tamil

Leave a Comment