யாழ்ப்பாணக் குடாநாட்டின் சாவகச்சேரிப் பிரதேசத்தில் பல வயல்களில் பரவியுள்ள white Back Plant Hopper இன பூச்சியினால் ஏற்பட்ட சேதம் தொடர்பில், விவசாயத் திணைக்களம் அதிகாரிகள் குழுவொன்றை அனுப்பி நோயைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த பூச்சி சேதம் பதிவாகியவுடன், விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மாலதி பரசுராமனுக்கு, நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகள் குழுவை அப்பகுதிக்கு அனுப்புமாறு பணித்தார்.
அதன்படி, இந்த நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் குழு தேவையான பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
விவசாயத் திணைக்களத்தின் கூற்றுப்படி, இந்தப் பூச்சி சேதத்தைக் கட்டுப்படுத்த கர்பிக்ஸ் மற்றும் எத்திப்ரோல் 100 கிராம்/ ஐஎஸ்சி ஆகிய இரண்டு பூச்சிக்கொல்லிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த பூச்சிக்கொல்லிகள் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் அவற்றை உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயிர்ச் செய்கை தொடர்பான வயல்களில் இந்தப் பூச்சிகள் காணப்பட்டால், இந்தப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த முடியும், மேலும் விவரங்களுக்கு, அந்தந்தப் பகுதிகளிலுள்ள விவசாய ஆலோசகர்களைச் சந்தித்துத் தேவையான ஆலோசனைகளைப் பெறுமாறு விவசாயத் திணைக்களம் விவசாயிகள் கேட்டுக்கொள்கின்றனர்.