களனிப் பல்கலைக்கழகத்தின் மூடப்பட்ட மூன்று பீடங்களும் எதிர்வரும் திங்கட்கிழமை (11) திறக்கப்படும் எனவும், அதற்கமைவாக விஞ்ஞானம், வணிகம் மற்றும் முகாமைத்துவம் மற்றும் தொழிநுட்ப பீடங்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் எனவும் களனி பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் காரணமாக கடந்த 5ஆம் திகதி மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நான்கு மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டது.




