25.4 C
Jaffna
March 5, 2025
Pagetamil
குற்றம்

2வது மனைவிக்கு விவாகரத்து வழங்க இலஞ்சம் வாங்கிய காதி நீதிபதி கைது!

கொழும்பு வடக்கு, காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர், நபர் ஒருவரிடமிருந்து 7,500 ரூபாவை இலஞ்சமாகப் பெறும்போது, அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

மாவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புகார்தாரர், தான் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்ட தனது இரண்டாவது மனைவியை பிரிந்து செல்ல காதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி விவாகரத்து சான்றிதழ் வழங்க ரூ.7,500. இலஞ்சமாக கோரியுள்ளார்.

தெமட்டகொட வடகொழும்பு காதி நீதிமன்றில் இலஞ்சம் வாங்கும் போதே நீதிபதி கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment