பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிக்க ஜால கால்வாயில் குதித்த திருடனை பிடிக்க, தானும் கால்வாயில் குதித்து காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிள் கிருஸ்ணமூர்த்தி பிரதாபன் (99033) என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (24) நீர்கொழும்பு வாவியின் சேடவத்த பகுதியில் கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினரால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சாவகச்சேரி பகுதியை சேர்ந்தவர்.
பமுனுகம சேடவத்த குளம் என அழைக்கப்படும் இந்தக் குளம் நீர்கொழும்பு வாவியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன பொலிஸ் கனான்ஸ்டபிளை தேடி வெலிசர கடற்படை முகாம் சுழியோடிகள், களனி பிரிவு பொலிஸ் நிலையத்தினர் மற்றும் பேலியகொட பொலிஸ் உயிர் பாதுகாப்பு நீர்மூழ்கி குழுவினர் நேற்று முதல் ஜால கால்வாயிலிருந்து நீர்கொழும்பு முகத்துவாரம் வரை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.