மாலபேயில் உள்ள பிரபல பாடகி நிரோஷா விராஜினியின் வீட்டிற்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 35 வயதுடைய சந்தேகநபரை நாளை (14) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல பதில் நீதவான் கமல் விஜேசிறி உத்தரவிட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் பல தடவைகள் பாடகியின் வீட்டிற்குள் நுழைய முயற்சித்துள்ளார்.
இது தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளை ஆராய்ந்த மாலபே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் ரத்நாயக்க தலைமையிலான குழுவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் பாடகரின் ரசிகர் என்று கூறப்படுகிறது. அவரை மனநல மருத்துவரிடம் அனுப்புவதற்கு பொலிசார் நீதிமன்றத்தின் அனுமதியையும் கோரினர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1