கர்நாடகாவில் அரசு அதிகாரி கத்தியால் குத்திக் கொலை

Date:

கர்நாடக அரசின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார் பிரதிமா. நேற்று முன்தினம் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார். இரவு 8 மணிக்கு மேல் பிரதிமாவை அவரது சகோதரர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அவரது அழைப்புக்கு பதில் இல்லை. இதையடுத்து அவர் மறுநாள் தனது சகோதரியின் வீட்டுக்கு நேரில் சென்றுள்ளார். அப்போது பிரதிமா கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதையடுத்து அவர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணையை தொடங்கினர்.

பிரதிமா (45) கடந்த சனிக்கிழமை இரவு 8 மணிக்கு பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

பிரதிமாவின் ஓட்டுநர்தான் அவரை வீட்டில் விட்டுள்ளார். அவரது கணவரும் மகனும் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். இந்தச் சூழலில் இரவு 8.30 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றிருப்பதாக தெரிகிறது.

பிரதிமாவின் முன்னாள் கார் சாரதிதான் இந்த கொலையை செய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சில பிரச்சினைகளால் சில நாட்களின் முன்னர் பணிநீக்கப்பட்டுள்ளார். புதிய சாரதிதான் சம்பவத்திலன்று, பிரதிமாவை வீட்டில் இறக்கி விட்டு சென்றுள்ளார்.

பணிநீக்கப்பட்டவர் ஆத்திரத்தில் இந்த கொலையை செய்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்