பிரமிட் திட்டத்தில் ஈடுபட்ட Onmax DT நிர்வாகிகளுக்கு விளக்கமறியல்

Date:

பிரமிட் திட்டங்களில் ஈடுபட்ட Onmax DT நிறுவனத்தின் ஐந்து பணிப்பாளர்களையும் நவம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்திக சம்பத், கயாஷான் அபேரத்ன, சம்பத் சதருவான், சாரங்க ரன்தீப மற்றும் தனஞ்சய ஜெயன் ஆகிய நிறுவனத்தின் பணிப்பாளர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றத்தில் அரச சட்டத்தரணி ஒஸ்வால்ட் பெரேரா, சந்தேகநபர்கள் வங்கிச் சட்டம் மற்றும் பணமோசடி சட்டத்தின் கீழ் பிணையில் வெளிவர முடியாத குற்றங்களைச் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

சந்தேக நபர்கள் 219,000 டெபாசிட்களை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அவர்களின் பணப்பையில் கிரிப்டோகரன்சி அல்லது மெய்நிகர் பணம் ரூ.429 மில்லியனாக உள்ளதாகவும் அரச சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

பணிப்பாளர் சம்பத் சதருவானின் வங்கிக் கணக்கிலிருந்து 558 மில்லியன் ரூபாவும், இந்திக்க சம்பத்திடமிருந்து 29 மில்லியன் ரூபாயும், தனஜய ஜெயனிடமிருந்து 117 மில்லியன் ரூபாயும், சாரங்க ரன்தீபவிடமிருந்து 182 மில்லியன் ரூபாயும், கயாஷனிடமிருந்து 19 மில்லியன் ரூபாவும் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பணத்திற்கு மேலதிகமாக சந்தேகநபர்களுக்கு அதிகளவான சொத்துக்கள் உள்ளதாகவும் சந்தேக நபர்களை விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்க வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, இயக்குனர் சம்பத் சதருவானிடம் ஹோட்டல் மற்றும் குடியிருப்பு வளாகம் உட்பட ரூ.624 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் உள்ளன. மேலும், உறவினர்கள் மற்றும் வேறு நபர்களின் பெயரிலும் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக சந்தேகநபரான இந்திக சம்பத்துக்குச் சொந்தமான 5.5 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் சாரங்க ரந்திபவுக்குச் சொந்தமான 90 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை விற்பனை செய்வது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. சந்தேகநபர்களின் மோசடியில் பெருமளவானோர் சிக்கியுள்ளதாகவும், வீரகெட்டிய, வலஸ்முல்லை, தெஹிவளை பிரதேசங்களில் மூன்று மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், எனவே சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டால் பெரும் மக்கள் சலசலப்பு ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனத்திற்கு மத்திய வங்கி தடை விதித்துள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அதனையும் மீறி பெருந்தொகையானோர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக அரச சட்டத்தரணி தெரிவித்தார். மேலும், நிறுவனம் மீது புகார் அளித்தால் வாடிக்கையாளர்களின் பணத்தை திருப்பி செலுத்த மாட்டோம் என டெபாசிட்தாரர்கள் மிரட்டப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, மெய்நிகர் நாணயமானது உலகில் பரிவர்த்தனைக்கான ஒரு ஊடகமாக அங்கீகரிக்கப்பட்டதாகவும், அது முதலீட்டிற்கான களமாகவும் காணப்படுகின்றது. சம்பந்தப்பட்ட நிறுவனம் பண பரிவர்த்தனை செய்யாததால், பிரமிடுகளை கடத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

இரு தரப்பினரும் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம், சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும், அவர்களின் கடவுச்சீட்டுகளை நீதிமன்றக் காவலில் வைக்குமாறும், தொலைபேசி உள்ளிட்ட தொடர்பாடல் சாதனங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் பொறுப்பில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. .

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்