யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட SBI வங்கியினை இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று திறந்து வைத்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நிதித்துறை அமைச்சர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
அதன் ஓர் அங்கமாக யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இந்திய பாரத ஸ்ரேட் வங்கியினை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களை திறக்குமாறு கூறி நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வங்கிக்கான பெயர் பலகையினை இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து வங்கியின் புதிய வாடிக்கையாளர் மூவருக்கு கணக்கினை ஆரம்பிப்பதற்கான கடிதத்தினை வழங்கி வைத்தார்.
நிழ்வில் வடக்கு மாகண பி.எஸ்.எம் சாள்ஸ் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாதசுந்தர் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.