யாழ் ஊடக அமையத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!

Date:

யாழ் ஊடக அமையத்தின் 2023-2024 ஆண்டுக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.

யாழ் ஊடக அமைய பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றபோதே புதிய ஆண்டுக்கான நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.

தலைவர் உரை,செயலாளர் உரை, பொருளாளர் கணக்கறிக்கை வாசித்தல் என்பன இடம்பெற்று புதிய நிர்வாக தெரிவு
யாழ் ஊடக அமைய உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இதன்போது யாழ் ஊடக அமையத்தின் புதிய தலைவராக மூத்த பத்திரிகையாளர் குமாரசாமி செல்வகுமார் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார்.

செயலாளராக மூத்த பத்திரிகையாளர் சி.நிதர்சனும், பொருளாளராக க.கம்சனனும்
தெரிவு செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து, உப தலைவர் , உப செயலாளர் தெரிவை அடுத்து நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

யாழ். ஊடக அமையமானது, 10 ஆண்டுகளை கடந்து 11ஆவது ஆண்டில் கால் பதிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள...

நீர்கொழும்பு சிறை விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...

நீர்கொழும்பு சிறை கலவரத்தில் உயிரிழப்பு 26ஆக உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்