பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலிட்டி வடக்கு பகுதியில் 120 லீற்றர் கசிப்புடனும் 800 லீற்றர் கோடாவுடனும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
காங்கேசன்துறை பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மயிலிட்டி வடக்கு பகுதியை சேர்ந்த 37 வயதானவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
இதன்போது கசிப்பு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபடும் குறித்த நபரை விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1