நாகை- காங்கேசன்துறை கப்பல் சேவை நாளையுடன் இடைநிறுத்தப்படுகிறது!

Date:

தமிழகத்தின் நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளையுடன் நிறுத்தப்படும் என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாகை துறைமுகத்தில் இருந்து, இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 14ஆம் திகதி தொடங்கியது. இந்தக் கப்பலில் பயணம் செய்ய முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், வாரம் முழுவதும் இயக்கப்படுவதற்குப் பதிலாக, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நாகையிலிருந்து பயணிகள் கப்பல் கடந்த 16ஆம் திகதி 15 பயணிகளுடனும், நேற்று 23 பயணிகளுடனும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு சென்றது.

இந்நிலையில், வடகிழக்குப் பருவ மழை வரும் 23ஆம் திகதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவும், நாகை துறைமுக விரிவாக்கப் பணி காரணமாகவும், நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளையுடன் (20) நிறுத்தப்படுகிறது.

நாளை காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகள் கப்பல், அங்கிருந்து கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

சுகீஷ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி Gotabaya Rajapaksaவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர லெனின்...

16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை

16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைத் தடைசெய்ய அல்லது கட்டுப்படுத்தும்...

இளம்பெண் மரணத்தின் காரணம் என்ன?

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கணுவ வீதியிலுள்ள வாடகை வீடு ஒன்றிலிருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்