8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 15 வயது மாணவன் ஒருவரை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பங்கதெனிய – கொட்டபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் தரம் 08 இல் கல்வி கற்கும் சிறுமியை கடந்த 14 ஆம் திகதி பிற்பகல் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக ஹலவத்த பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிறார் சந்தேக நபர் ஹலவத்தை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தாப்படவுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1