முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா தனது 75 வது வயதில் காலமானார்.
இவர் இலங்கையின் 30 வது பொலிஸ் மா அதிபர் ஆவார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (16) மாலை அவர் உயிரிழந்துள்ளார். அவர் 4 பிள்ளைகளின் தந்தையாவார்.
பாணந்துறையை வசிப்பிடமாக கொண்ட அவர், பல மாதங்களாக பொலிஸ் வைத்தியசாலையிலும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
விக்டர் பெரேராகொழும்புப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர்.




