‘எல்லாரும் எங்கள மன்னிச்சிருங்க’: கிளிநொச்சியில் 17 வயது நண்பிகள் இருவர் ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை!

Date:

எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு எங்களுக்கு
வாழவே பிடிக்கவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு
சிறுமிகளும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

இன்று (16) பிற்பகல் இரண்டு மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. சுரேஸ்குமார் தனிகை வயது 17 லோகேஸ்வரன் தமிழினி
வயது 17 ஆகிய இரண்டு சிறுமிகளுமே லோகேஸ்வரன் தமிழினியின் வீட்டுச்
சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இறுதியாக
நடைப்பெற்ற க.பொ.த சாதாரன தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக
காத்திருக்கும் மாணவிகள் ஆவா்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலீஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனு்ப்பி வைத்துள்ளனர்.

அத்தோடு இது தற்கொலையா கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

சுவாமி விபுலானந்தர் கலாச்சார மண்டபத்தில் மாணவர்களுக்கு பரீட்சை செயலமர்வு

காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம்...

ஜனாதிபதி விருதைப் பெற்ற சாய்ந்தமருது மாணவன் அன்சார் முஹம்மட் சினான்

இலங்கை சாரணர் சங்கத்தின் உயரிய கௌரவ விருதான ஜனாதிபதி சாரணர் விருதை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்