பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு இன்று (13) முதல் 3 வார காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில் இந்த சேவை நீடிப்பில் ஜனாதிபதி செயலர் கையொப்பமிட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சி.டி.விக்கிரமரத்னமுன்பு தலா மூன்று மாதங்களுக்கு இரண்டு சேவை நீட்டிப்புகளைக் பெற்றிருந்தார். அவரது கடைசி சேவை நீடிப்பு கடந்த 25ஆம் திகதி முடிவடைந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1