தலாவ நகரில் நடைபெற்ற புலமைப்பரிசில் கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவியொருவர், தனது தாயாருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, எரிபொருள் பவுசர் மோதி உயிரிழந்துள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தலாவ கரகஹவெவ பிரதேசத்தில் வசிக்கும் நிசான்சா நெட்சராணி விமலசேன (10) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.அவர் தலாவ ஆரம்ப பாடசாலையில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.
இந்த விபத்தில் 47 வயதுடைய சிறுமியின் தாயாரும் பலத்த காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யட்டியந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பவுசர் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று (11) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1