28.4 C
Jaffna
March 1, 2025
Pagetamil
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி வெளிநாட்டு மேற்பார்வையிலேயே விசாரணை வேண்டும்: கத்தோலிக்க திருச்சபை மீள வலியுறுத்தல்

இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள புதிய கடிதத்தில், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னைய விசாரணைகளில் காணக்கூடிய சில குறைபாடுகளை களைவதற்கு உள்ளுர் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினால் நியமிக்கப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கான தேசிய கத்தோலிக்கக் குழுவின் உறுப்பினர்களான கர்தினால் மால்கம் ரஞ்சித் உட்பட பல ஆயர்கள் கையெழுத்திட்ட கடிதத்தில் முந்தைய விசாரணைகள் முக்கியமான பிரச்சினைகளை புறக்கணித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க எஃப்.பி.ஐ உளவுத்துறையால் சிஐடியிடம் ஐபி முகவரி ஒப்படைக்கப்பட்ட நபர் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை, சோனிக் சோனிக் என அடையாளம் காணப்பட்ட ஐபி பண்டாரவின் விசாரணையை நிறுத்துதல், அபு ஹிந்தை அடையாளம் காணத் தவறியமை, குண்டுதாரி ஜெமிலுக்கு புலனாய்வுப் பிரிவுகளுடன் இருந்த தொடர்பைக் கண்டறிய விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியமை மற்றும் கலனிகம வெளியேறும் இடத்தில் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட லொறி ஒன்று கடந்து செல்ல அனுமதிக்கப்பட்ட சம்பவம் என்பன உரிய முறையில் ஆராயப்படவில்லை என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இராணுவப் புலனாய்வு இயக்குநரகம் மற்றும் அரச புலனாய்வு சேவை ஆகியவை சஹ்ரானுடன் நெருங்கிய உறவுகளை கொண்டிருந்தன என்பது தெளிவாகிறது. இந்த விசாரணைகளைத் தடுக்கவும் நாசவேலை செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன” என்று கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.

சனல் 4 காணொளியில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறும் குழு கோரியுள்ளது. இந்த விசாரணையை சுதந்திரமான வெளிநாட்டு பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார்கள்.

இக்கடிதத்தில் கர்தினால் மல்கம் ரஞ்சித், இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேரா, சிலாபம் ஆயர் வலன்ஸ் மெண்டிஸ், காலி ஆயர் ரேமண்ட் விக்கிரமசிங்க, உதவி ஆயர்களான ஜே.டி.அந்தோனி ஜெயக்கொடி, அன்டன் ரஞ்சித் மற்றும் மாக்ஸ்வெல் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘ஊடகப் பயிற்சிகளுக்கு உதவி வழங்குவோம்’: அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திடம் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா உறுதி

Pagetamil

தேங்காய் விலை வழமைக்கு திரும்பும்

Pagetamil

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்புறக்கணிப்பு அப்டேற்

Pagetamil

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் – கஜேந்திரகுமார்

Pagetamil

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!