KPL தாச்சி சுற்று போட்டியின் இறுதி சுற்றில் தாவடி பண்டார வன்னியன் அணி வெற்

Date:

தாவடி காளிகாம்பாள் விளையாட்டு கழகத்தின் வைரவ விழா மற்றும்  தாவடி  சிறி காளிகாம்பாள் சனசமூக நிலையத்தின் 49ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இரண்டு சமூக மட்ட அமைப்புக்களும்  இணைந்து நடாத்திய kpl மாபெரும் இறுதி சுற்றுபோட்டி இன்று மாலை 5மணியளவில்  தாவடி காளி அம்பாள் விளையாட்டு கழக மைதானத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

யாழ் மாவட்டத்தின் 7 அணிகளுக்கிடையில் இடம்பெற்ற சுற்றுபோட்டியில் இறுதி சுற்றிற்கு தகுதி பெற்ற தாவடி பண்டார வன்னியன் மற்றும் தாவடி கைலை வன்னியன் அணிகளின் இறுதி சுற்றை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ச்சியாக இடம்பெற்ற சுற்றுபோட்டியில் பண்டார வன்னியன் அணி 7:6 என்ற அடிப்படையில் வெற்றிபெற்றது.

இதன்பொழுது நாடாளுமன்ற முன்னாள் ஈஸ்வரபாதம் சரவணபவன், யாழ் பல்கலைக்கழக உடற்கல்வி விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன், யாழ் மாவட்ட தாச்சி சங்க தலைவர் வி.ஜெயவிந்தன், சிறி காளிகாம்பாள் சனசமூக நிலையத்தினர், காளிகாம்பாள் விளையாட்டு கழகத்தினர், தாச்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ்...

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் திருப்பித்தர ஒப்புக்கொண்டது: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கைப்...

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்