சாவகச்சேரியில் வீட்டின் மீது தாக்குதல்

Date:

யாழ்.தென்மராட்சி மீசாலை மேற்கு பகுதியிலுள்ள வீட்டின் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கதவை உடைத்து உள்ளே நுழைந்த இனம் தெரியாத குழுவினர் பொருட்களுக்கு தீயிட்டுள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள், தொலைக்காட்சி மற்றும் வீட்டு தளபாடங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

வீட்டில் தாய், மகள் பேரப்பிள்ளைகள் என ஐவர் இருந்துள்ளனர்.

இதன்போது வீட்டில் இருந்தவர்களுக்கு எதுவித சேதங்களும் ஏற்படவில்லை.

தீ பரவுவதை கண்ணுற்ற அயலர்கள் அவர்களை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஆறு தமிழ் கட்சிகள் முக்கிய விடயங்களில் ஒருமித்து செயற்பட திட்டம்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் இணைந்து...

30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கர்நாடக அரசு மரியாதையுடன் இசையரசி எஸ்.ஜானகி உடல் தகனம்

மறைந்த பிரபல பின்​னணி பாடகி எஸ்​.ஜானகி​யின் உடல், கர்​நாடக அரசின் முழு...

நீர்கொழும்பு சிறை விசாரணையில் பல மர்மங்கள்

6ஆம் திகதி நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது 8 சிறைச்சாலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்