Pagetamil
இலங்கை

இங்கிலாந்து கனவு கனவு இறப்பில் முடிந்தது: கொடிகாமம் இளைஞனின் உடல் பிரான்ஸில் மீட்பு!

பிரான்சில் இலங்கைத் தமிழர் ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

வடக்கு  பிரான்ஸின் டன்கேக் மாவட்டத்திலுள்ள ஆறொன்றில் இருந்து, கடந்த 1ஆம் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

அந்த பகுதியிலுள்ள அகதி முகாமொன்றில் தங்கியிருந்த கொடிகாமம் கச்சாய் தெற்கு பகுதியை சேர்ந்த சண்முகராஜா தினேஸ் (33) என்ற இளைஞன், சட்டவிரோதமாக முகவர்கள் ஊடாக பிரிட்டனுக்கு செல்ல புறப்பட்ட நிலையில், காணாமல் போயுள்ளதாக குடும்பத்தினர் பிரான்ஸ் பொலிசாரிடம் முறையிட்டிருந்தனர்.

இதையடுத்து, பொலிசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் சண்முகராஜா தினேஸ் என்பதை உறுதி செய்தனர்.

பிரான்ஸ் வடக்கு டன்கேக் மாவட்ட எல்லையில் உள்ள 40 கிலோமீற்றர் அளவான குறுகிய நீரெல்லை, இங்கிலாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளை பிரிக்கிறது. பிரான்ஸ் ஊடாக இங்கிலாந்து செல்லும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் இந்த மார்க்கத்தையே பயன்படுத்துவதால், அடிக்கடி இங்கு உயிரிழப்புக்கள் பதிவாகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சமத்துவத்திற்கு எதிரான உணவுக் கட்டணங்கள் – இரவீ ஆனந்தராஜா

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

3 வாரங்களில் 3,649 டெங்கு நோயாளர்கள்

Pagetamil

போதையில் தள்ளாடும் பொலிசார்

Pagetamil

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறையின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனியன்று ஆரம்பம்!

Pagetamil

Leave a Comment