கடந்த கொவிட் தொற்றுநோய் காலத்தில் கிழக்கு மாகாண ஆசிரியர்களின் குறைக்கப்பட்ட சம்பளத்தை நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் மீள வழங்குவதற்கு சட்டமா அதிபர் உயர் நீதிமன்றில் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்வுப்படி, மனு மீதான விசாரணை நிறைவடைகிறது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் முன்னாள் கிழக்கு ஆளுநர் அனுராதா யஹான்பத் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக தாக்கல் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த கொவிட் காலத்தில் கிழக்கு மாகாண ஆசிரியர்களின் நாளாந்த சம்பளத்தை குறைக்க தீர்மானித்ததன் மூலம் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1