25.7 C
Jaffna
January 17, 2025
Pagetamil
உலகம்

ரூ.259 கோடி பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு சென்று வங்கியில் வைப்பிலிட்ட தமிழர்: அவுஸ்திரேலிய இரகசிய பொலிசார் அம்பலப்படுத்திய தகவல்!

அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒருவர் பெருந்தொகை பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு வந்து வங்கியில் வைப்பிலிட்ட சம்பவம் வெளிப்பட்டதை தொடர்ந்து, குற்றவியல் விசாரணையை எதிர்கொள்கிறார்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சாதாரணமான நபரான அவர், இவ்வளவு பெருந்தொகை பணத்தை எப்படி வைப்பிலிட முடிந்தது என்ற கேள்வியெழுந்துள்ள நிலையில், பொலிசார் இது பற்றி விசாரித்து வருகிறார்கள்.

அவர் 8 மில்லியன் அமெரிக்க டொலரை ( 259,18,92,000.00 இலங்கை ரூபா) வங்கியில் வைப்பிலிட்டுள்ளார். அவரை கண்காணித்த அவுஸ்திரேலியாவின் இரகசிய பொலிசார், அவர் பெருந்தொகை பணத்தை வைப்பிலிடும் காட்சிகளை இரகசியமாக காணொளியாக பதிவு செய்துள்ளனர்.

சுஜிகரன் தம்பிராஜா என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், 2022 குளிர்காலத்தில் அவுஸ்திரேலிய பெடரல் காவல்துறையின் இரகசிய கண்காணிப்புக் குழுக்களால் சிட்னியின் மேற்குப் பகுதியில் பின்தொடரப்பட்டுள்ளார்.

தன்னை பொலிசார் பின்தொடர்வதை அறியாக சுஜிகரன்,  ஜூன் 2022 இல் இரண்டு வங்கிகளில் 8 மில்லியன் டொலர் பணத்தை வைப்பிலிட்டுள்ளார். ஒரு வெஸ்ட்பேக் கிளையின் உள்ளே, சுஜிகரன் 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அடங்கிய பெரிய மூட்டைகளைக் கொடுப்பதை புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.

பின்னர் அவர் மற்றொரு இடமான சென்ட் ஜோர்ஜ் வின்ஸ்டன் ஹில்ஸ் கிளையில் அதிக பணத்தை ஒப்படைத்தார். இதன்போது, சுஜிகரன் தனது போனில் 34,400 டொலர் என்று கணக்கிடுவதை இரகசிய பொலிசாரின்  கமரா படம் பிடித்தது.

சுஜிகரன் இவ்வளவு கணிசமான தொகையை எப்படி சேர்த்தார்?, இவ்வளவு பெரிய தொகையை வைப்பு செய்ததன் நோக்கம் என்ன? என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் பொலிசார் இது பற்றி விசாரித்து வருகிறார்கள்.

இந்த பெரிய தொகையானது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் பெறப்பட்டதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

சுஜிகரன் பணமோசடி அல்லது வேறு முறைகேடான செயல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் கடுமையான சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இம்ரான் கானுக்கு 14 வருட சிறைத்தண்டனை

Pagetamil

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெய்லர் பிரிட்ஸின் நிதியுதவி

east tamil

உரிமையாளருக்காக 2 மாதங்கள் காத்திருக்கும் நாய்

Pagetamil

கைதிகள் துணையுடன் உறவு கொள்ள சிறைச்சாலைகளுக்குள் ‘காதல் அறைகள்’: இத்தாலி உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஏற்படும் மாற்றம்!

Pagetamil

இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது: ஆறு வார காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விவரங்கள்!

Pagetamil

Leave a Comment