நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்

Date:

நாகை மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தி, மீன்கள், வலை உள்ளிட்ட ரூ.5 லட்சம் பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த செருதூரைச் சேர்ந்தவர் சக்திபாலன் (24). இவர், தனது பைபர் படகில், செருதூரைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (25), சூர்யா (19), சிரஞ்சீவி (20), புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த கண்ணன் (20) ஆகியோருடன் செப்டெம்பர் 24ஆம் திகதி காலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்.

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று முன்தினம் இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 2 அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, செருதூர் மீனவர்களின் படகில் ஏறி, கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் மீனவர்களை தாக்கினர். பின்னர், அவர்களை மிரட்டி, 550 கிலோ வலை, 100 கிலோ மீன்கள், வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, பேட்டரி, டார்ச் லைட் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதில் காயமடைந்த சக்திபாலன் உள்ளிட்ட 5 மீனவர்களும் நேற்று காலை செருதூர் கடற்கரைக்கு திரும்பினர். அவர்களை மீனவக் கிராம பஞ்சாயத்தார் நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

23ஆம் திகதி செருதூர் மீனவர்கள் தாக்கப்பட்ட நிலையில், மீண்டும் கடற்கொள்ளையர்களால் செருதூர் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், இந்திய கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வாழைச்சேனையில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஆண் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு

வாழைச்சேனை சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்க சென்ற  ஆண் ஒருவர் குளத்து நீரில்...

மட்டு நகரில் கடை தொகுதிகள் தீப்பற்றியதை தீயணைப்பு படையினர் 4 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டில்

மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகள் இன்று...

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்