கையடக்கத் தொலைபேசியை பெற்றோர் எடுத்துச் சென்றதாக எண்ணி உடலில் கத்தியால் அறுத்து வன்முறையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையில் வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. .
இந்த இளைஞன் ஒரு நாளைக்கு 18 மணித்தியாலங்கள் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாகியுள்ளார். அவ்வாறு செய்ய வேண்டாம் என பெற்றோர் எச்சரித்ததால், இந்த இளைஞன் கத்தியால் தனது உடலை வெட்டியுள்ளார்.
பன்வில, கந்தேகும்புர பகுதியைச் சேர்ந்த ஹர்ஷன லக்ஷான் தில்ருக்ஷ என்ற இளைஞனே வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார்.
அவர் கடிதமொன்றை எழுதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இளைஞன் குடும்பத்தில் யாருடனும் தொடர்பு கொள்ளாமல் தனிமையில் மொபைல் போன் கேம் விளையாடுவதற்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது.




