27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

பீடி உற்பத்தியாளரை கடத்தி கப்பம் பெற்ற கலால் திணைக்கள உத்தியோகத்தர்கள் நீக்கம்

வலஸ்முல்லையில் பீடி உற்பத்தி செய்த நபரை கடத்திச் சென்று தாக்கி கப்பம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தங்காலை கலால் பிரிவு பொறுப்பதிகாரி  உட்பட 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் இரண்டு கலால் உத்தியோகத்தர்கள், கலால் உத்தியோகத்தரான சாரதி மற்றும் இராணுவ சார்ஜன்ட் ஒருவரும் உள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வலஸ்முல்ல பீடி உற்பத்தியாளரின் உரிமம் ஜூலை 26ஆம் திகதியுடன் காலாவதியானது. இதன் காரணமாக தங்காலை கலால் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் உற்பத்தியாளரிடம் சென்று வழக்குப் பதிவு செய்வதாகக் கூறி நீதிமன்றத்திற்குச் செல்லாமல் 14 இலட்சம் ரூபாவை செலுத்தி வழக்கை தீர்த்து வைக்குமாறு கோரியுள்ளனர். இதற்கு பீடி உற்பத்தியாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பீடி உற்பத்தியாளரை கலால் திணைக்கள அதிகாரிகள் பலவந்தமாக கடத்திச் சென்று தாக்கி 10 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர் கடத்தப்பட்ட விதம் அருகே சி. சி. டி. வி. கமராவில் பதிவாகியுள்ளது.

இதேவேளை, வலஸ்முல்ல பிரதேசத்தில் பீடி உற்பத்தியாளர் ஒருவரை தாக்கி கப்பம் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 4 கலால் அதிகாரிகளை பணி இடைநிறுத்தம் செய்ய கலால் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து தரம் பாராமல் சட்டத்தை அமுல்படுத்துமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உரிமம் இன்றி பீடி இலை வைத்திருந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், சட்டத்தை அமுல்படுத்தாமல் இருக்க இலஞ்சம் கேட்டு தாக்கிய குற்றத்திற்காக தங்காலை கலால் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

east tamil

A9 வீதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

east tamil

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணு லான்ஸ் கோப்ரல் பலி

east tamil

Leave a Comment