கனடாவில் பொலிஸ்காரராக நடித்து 13 வயது சிறுமியை சீரழித்த தமிழன்!

Date:

கனடாவில் ஒன்ராரியோ மாகாணத்தில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியான பிரம்ரனில், 13 வயதான சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

33 வயதான அனுஷன் ஜெயக்குமார் என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் வியாழன் மதியம் Bovaird Drive மற்றும் Mountainash Road பகுதியில் இடம்பெற்றுள்ளது.

13 வயது சிறுமி ஒரு பிளாசா வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, தெரியாத நபர் ஒருவர் சிறுமியை அணுகியதாக பீல் பிராந்திய பொலிசார் தெரிவித்தனர்.

அவர் தன்னை ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் என்று கூறி, பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

சனிக்கிழமையன்று, அனுஷன் ஜெயக்குமார் என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் பொலிஸ் உத்தியோகத்தராக ஆள்மாறாட்டம் செய்தல், வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் குறுக்கீடு ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

சந்தேகநபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், சந்தேகநபரால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் எனவும் அவ்வாறானவர்கள் இருந்தால் தம்மை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கர வண்டி கவிழ்ந்து 4 பாடசாலை மாணவர்கள் காயம்!

ஹட்டன் - புளியாவத்தை பிரதான சாலையில், பி.டபிள்யூ. (P.W.) பகுதியில், மாணவர்கள்...

பெண் கொலை: தூக்கில் ஆணின் சடலம்!

புசல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரகல, பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி...

துடுப்பாட்ட தரவரிசையில் 16வது இடத்திற்கு முன்னேறிய பவன் ரத்நாயக்க

இலங்கைத் துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக்க, சமீபத்திய ஐசிசி ஆடவர் ஒருநாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்